Saturday, March 5, 2011

கூட்டலும்.... கழித்தலும்

திறமையை
கூட்டி கூட்டி
ஏழை
கோடிஸ்வரன் ஆனான்!

ஆணவத்தை
கூட்டி கூட்டி
கோடிஸ்வரன்
பிச்சைக்காரன் ஆனான்!

நேசம்

உண்மையாக நேசித்தால்
நெருப்புக் கூட
சுகம் ..
பொய்யா நேசித்தால்
எரிந்த சாம்பல் கூட
சுடும் ..

ஜோசியம்

கதவிடுக்கில் மாட்டி
உயிர் விட்ட பல்லி
சற்றுமுன்
ஜோசியம்
சொன்னது
யாருக்கோ !!!!!!!!

களங்கமற்ற அணுகுமுறை

நடைமுறை வாழ்வில் மனித மூளையானது தாவி தாவி போனாலும் எதையும் புரிந்துகொண்டு விடும் ஆற்றல் கொண்டது . ஆனால் மனித மனம் உணர்வுபூர்வமானது . தாவி தாவி போனால் யாரையும் புரிந்து கொள்ளாது தவிக்கும். வ்வொரு நிகழ்ச்சியையும் ஒவ்வொரு செயலையும் எழுத்து கூட்டி
படிக்க ஆரம்பித்தால் கற்பனை தறிகெட்டு ஒடி நிறைய உறவுகள் சிக்கல் நூல்கண்டுகலாகிவிடும். என்னுடையவர்கள் என்பதை முதல் எழுத்தாகவும் நல்லவர்கள் என்பதை கடைசி எழுத்தாகவும் மட்டும் புரிந்து கொண்டு விட்டால் நடுவே எப்படிப்பட்ட குழப்ப சம்பவங்கள் நடந்தாலும் அந்த அடிப்படை அன்பு மாறாமலிருக்கும்.கணவன் முதல் அலுவலக ப்யூன் வரை நாம் தினமும் சந்திக்கும் எல்லா முகங்களுக்கும் உறவுகளுக்கும் இந்த முதல் _ கடைசி எழுத்து பார்மலா பொருந்தும் .
வேண்டியதெல்லாம் களங்கமற்ற அணுகுமுறைதான் .........

Friday, February 11, 2011

நாம் மனிதர்கள்

கை அசைந்தாலே
காற்றில் பறந்துவிட
நாம்
பயந்தாங்கொள்ளி காகம் அல்ல

ஆபத்தை அறிந்தால்
மணலுக்குள்
கொள்ள
முட்டாள் நெருப்பு கோழியுமல்ல

தொட்டாலே
சுருண்டு கொள்ள
பரிதாப மரவட்டையும் அல்ல

வருவது எதுவாயினும்
எதிர் கொள்ள வேண்டும்
உறுதியோடு நின்று
மகுடம் சூட வேண்டும் .
ஏனெனில்
"நாம் மனிதர்கள்"

நட்பு

கரை மோதும் கடல் அலை போல
என் நட்பின் தாழ்வாரங்களில்
சீரான இடைவெளியில் ஈரம் விட்டு
செல்லும் உனக்காக இந்த மனசு
நீள் கரையாய் எப்பொழுதும் சிரித்திருக்கும் ......................

Sunday, March 14, 2010

புதுப்பித்துக் கொள்வோம்

கையேந்தி யாசிக்காமல் பத்து ரூபாய் விற்க வந்த வயதான பாட்டியை புறகணித்து ரயில் பிடிக்க ஓடிய கணம் வாழ்க்கையில் நிரந்தர உறுத்தலயிற்று. கடமைக்காக பழகியவர்கள் திருமணம் சென்று வரிசையில் நின்று பரிசு கொடுத்து அவசரக் கதியில் அலுவலக நாற்காலியில் வந்து விழுகையில் மனம் அறிவித்தது வாழ்த்த மறந்த செய்தியை...........
இவை மட்டுமா ?????

கவிதை புத்தகம் வாசித்து மரம் சுற்றி உதிர்ந்த பூக்களை ரசித்து ஒரு மழை நாளை கொண்டாடியும் நாளாயிற்று.
என்ன செய்வது ????????

தவிர்க்க இயலா பணத் தேவைகளில் நம் ரசனைகளை பரபரப்புக்கு இரையாக்கி நேரங்களை காசாக்கிக் கொண்டிருக்கிறோம் நாம்.

அதிர்ஷ்ட வசமாக பிறிதொரு நாள் நேரம் கிடைத்தால் ..........புதிப்பித்து கொள்வோம் , நம் ரசனைகளை நல்லுணர்வுகளை ..............