அம்மி மிதித்து
அருந்ததி பார்த்து
ஆண்டு இங்கு இருபது
ஆயாச்சு.
எப்போ நீ பிறப்பே
என்று தான்
இங்கு ஒரே பேச்சு...!!
இதயத்து அறைகளிலே
இளம்பிஞ்சே
உன்முகம் தான்...
என் கந்தகக்
கருப்பையில்
ஃபீனிக்ஸாய்
எழுவாயா???
விரதமும் வேண்டுதலும் - உன்
வரவைச் சொல்லலையே...!!
வாடகைத்தாய் வாங்க
எனக்குப் பிடிக்கலையே!!
சோதனைக்குழாய் முறைக்கும் - முதல்
சோதனையிங்கு பணத்திலாமே??
சொச்ச ரொக்கமில்லையினா
சோதனைக்குழாயும் கிடைக்காதாமே??!!
உன் பிஞ்சுவிரல் ஸ்பரிசத்துக்காய் என்
உயிரே தவிக்குதிங்கே...!!
நஞ்சுரைக்கும் வல்லூறால் - என்
நெஞ்சு மருகி விம்முதிங்கே...!!
ஆண்டுபல போனாலும் - உன் வரவு
கனவில் தான் நிஜமாச்சு...!!
'ம்மா'-னு நீ சொல்ல தவமிருக்கும்
இந்த தரிசுத்தாய் நானாச்சு..!!
பேதையாகி பிதற்றுறேனே - உன்
பிஞ்சுமுகம் காணாமலே...!!
காலம் வந்து கனிந்துவிட்டால் - நீ
என்கண் முன்னாலே...!!
காத்திருந்து கருகினாலும் - உன்
நினைப்பு மட்டும் நித்தியமாய்...!!
பூத்திருக்கும் புதுப்பூவாய் - நீபிறக்க
இன்னும் எத்தனைநாள் சத்தியமாய்..??
பிரம்மன் வரையா ஓவியமே..!!
சிற்பி செதுக்கா
சீர் சிலையே..!! - என்
வயிற்றில் வளரா
வளர் பிறையே...!!
என்று வந்து
என் வயிற்றில்
உயிர்த்து என்னை
உயிர்ப்பிப்பாய்..???
( இதை என் தோழிக்காக ,அவள் விழியில் இருந்து வரும் கண்ணீர்க்காக)
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment