இந்தப் பாடல் மனதை பின்னோக்கி இழுத்துச் சென்றது. )
பசுமை நிறைந்த நினைவுகளே
படம்: ரத்தத் திலகம்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே
பழகிக் கழித்த தோழர்களேபறந்து செல்கின்றோம்
பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே
பழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம்
குரங்குகள் போலே மரங்களின் மேலே தாவித்திரிந்தோமே
குரங்குகள் போலே மரங்களின் மேலே தாவித்திரிந்தோமே
குயில்களைப் போலே இரவும் பகலும் கூவித் திரிந்தோமே
குயில்களைப் போலேஇரவும் பகலும் கூவித் திரிந்தோமே
வரவில்லாமல் செலவுகள் செய்து மகிழ்ந்திருந்தோமே
வரவில்லாமல் செலவுகள் செய்து மகிழ்ந்திருந்தோமே
வாழ்க்கைத் துன்பம் அறிந்திடாமல் வாழ்ந்து வந்தோமே
நாமே
வாழ்ந்து வந்தோமே
பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே
பழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம்
எந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோ
எந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோ
எந்த அழகை எந்த விழியில் கொண்டு செல்வோமோ
எந்த அழகை எந்த விழியில் கொண்டு செல்வோமோ
இந்த நாளை வந்த நாளில் மறந்து போவோமோ
இந்த நாளை வந்த நாளில் மறந்து போவோமோ
இல்லம் கண்டு பள்ளி கொண்டு மயங்கி நிற்போமோ
- என்றும்மயங்கி நிற்போமோ
பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே
பழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம்
நாம்பறந்து செல்கின்றோம்
3 comments:
அட இது எவர் கீரின் சாங் ஆச்சே!!!
ம்ம் நிறைய தடவை கேட்டாலும் மனசுக்குள்ள சந்தோஷம் சோகம் ரெண்டையும் கொண்டு வந்து கொட்டிடும் !
மயிலாடுதுறை போயிட்டு வந்ததை பத்தி சொல்லுங்க! அதை வைச்சு கொஞ்சம் ஊர் நியாபகத்தை கிளறி பார்த்துக்கிடலாம் :))
Neengaatha ninaivugalaai muthal kaathal...adhupol endrume marakkamudiyaadha golden hit paadal idhu...eththanai..eththanai murai vendumaanaalum salippu eatpaduththaadha paadal...
பகிர்வுக்கு நன்றிபா
Post a Comment