பெரும்பாலும் உரையாடல்களற்றே இருக்கும் அப்பா பெரியப்பாவின் அன்பை அவர்களுக்கிடையேயான பழைய கடிதங்களில் கண்டு கொண்டதாக
ஆனந்தப்பட்டு இருக்கிறாள் அம்மா....
ஆயிரம் மடல்கலோடு அழிந்த எழுத்துக்களோடு
பிரித்தாலே ஒடிந்து விழும் பொக்கிஷக் கடிதங்களை அப்படியே ஒப்பிக்கிறாள் எழுத படிக்க தெரியாத பாட்டி ...
நாம் நேசிக்கப்பட்டதை, வாழ்வை கொண்டாடிய நாட்களை, அடித்தல் திருத்தல்களுக்கிடையில் தெரியும் அன்பை நெகிழ வைக்கும்......
ஏதோ தேடுகையில் எங்கிருந்தோ தலைகாட்டும் பத்திரப்படுத்தப்ப்ட்ட பழங்கடிதங்கள்....
இப்போதைய மின்னஞ்சலிலும் தொலைபேசியிலும் பல்லூடகக் குறுஞ்செய்தியிலும் கொஞ்சங் கூட தெரியவில்லை எழுத்துப் பிழையோடு இயைந்த பசுமையான அன்பின் வாசம்.....
துடிதுடிப்புடன் துரிதமாகவே எல்லாம் பழகிப் பழகி நெகிழ்வான நினைவுகளும் அன்பான எழுத்துக்களும் ஏங்கி, யாசித்து , நிற்கப் போகிறோம் பின்வரும் நாளில்.......
இதுதான் சௌகர்யம் என்ற நம் கற்பிதத்தாலோ.....
தவிர்க்க இயலாமலோ.....
கூட்டு குடும்பங்களைப் போல்
பல பாரம்பரிய விழாக்களைப் போல்
சத்தமில்லாமல் காலாவதியாக வருகின்றன நம் கடிதங்களும்......
2 comments:
ஆஹா ஜூப்பரு ஆஹா ஜூப்பரு!
நல்ல ஆதங்கம் தான் மாலா!!
//ஏதோ தேடுகையில் எங்கிருந்தோ தலைகாட்டும் பத்திரப்படுத்தப்ப்ட்ட பழங்கடிதங்கள்....//
ஆமாம். அழகாய் சொல்லியிருக்கிறீர்கள் அன்புள்ள அக்கடிதங்களுக்கு அவசர உலகத்தில் இடமின்றி போய்விட்டதையும், இயலாமையுடன் அதை நாமும் ஏற்றுக் கொண்டு விட்டிருப்பதையும்!
Post a Comment