Wednesday, October 14, 2009

விதி

யாருக்கும் வெளிச் சூழ்நிலை எல்லாத் தருணங்களிலும் நூறு சத்விகிதம் விரும்பியபடி அமைந்து விடுவது இல்லை. மாற்ற முடியாதசூழ்நிலையை எதிர்த்து நின்றால் அமைதி கானாமல் போகும். மூளை ஸ்தம்பித்து நிற்கும். மாறாக அதை உள்ளபடி ஏற்றுக் கொண்டு விட்டால் அடுத்து என்ன செய்வது என்று புத்திசாலித்தனமாக யோசிக்க முடியும். இதற்க்காகத்தான் விதி என்று சொல்லி வைத்தார்கள்.
ஆனால் விதி என்றால் எதையும் சகித்துக் கொண்டு செயலற்று இருப்பது என்று தவறாக புரிந்து கொண்டு உள்ளார்கள். எந்த சூழ்நிலையிலும் சகித்துக் கொள்ளக் கூடாது. சகித்துக் கொள்வது என்பது விருப்பத்தோடு செய்வது இல்லை.கட்டாயத்தால் செய்வது.
எனவே அதை விடுத்து எதையும் அமைதியாக ஏற்றுக் கொண்டு விதியை நமக்காகவே மாற்றிக் கொள்வது எப்படி என்று யோசித்து செயலாற்ற வேண்டும். நாம் வளர வேண்டுமானால் விதி பற்றிய பயமுறுத்தல்கள்ல் இருந்து முதலில் வெளியே வர வேண்டும்.
கடவுளே வந்து சொன்னாலும் நம் விதியை நாம்தான் தீர்மானிப்போம் என்கிற உறுதி நமக்கு வரவில்லை என்றால் நம் வாழ்க்கை அதன் போக்கில்தான் நடக்கும். விரும்பியதை அடைய வேண்டும் என்ற தீவிரம் நமக்கு இருந்தால் நம் விதியை கடவுளிடமிருந்து பறித்து நாம் கையாள முடியும்.



2 comments:

said...

விதியை மதியால் வெல்லலாம் என்கிறீர்கள், அப்படித்தானே?

//எதையும் அமைதியாக ஏற்றுக் கொண்டு விதியை நமக்காகவே மாற்றிக் கொள்வது எப்படி என்று யோசித்து செயலாற்ற வேண்டும். நாம் வளர வேண்டுமானால் விதி பற்றிய பயமுறுத்தல்கள்ல் இருந்து முதலில் வெளியே வர வேண்டும்.//

அருமை.

said...

சரியாக சொல்லி இருக்கிறீர்கள்

வாழ்த்துக்கள்..