Thursday, August 27, 2009

குறட்டை

ஏன் உன்னைப் பார்தது
சிலருக்குச் சிரிப்பு
பலருக்கு முகச் சுழிப்பு
எதற்காக?
நீ என் நித்திரையின் சிரிப்பொலி
என் நிம்மதியின் எக்காளம்.

மௌனத்தின் மொழி

வெற்றியில் மௌனம் அடக்கம்
தோல்வியில் மௌனம் சாதனை
இன்பமான நேரங்களில் மௌனம் சம்மதம்
உண்மையானவர்கள் பிரியும் பொழுது மௌனம் துன்பம்
இறுதியில் மௌனம் மரணம்

Sunday, August 9, 2009

அன்புத் தோழி

சிரித்தால் சிரிப்பதற்கு
பலர் உண்டு ..
பொழுது போக்கவே
கூடி சிரிக்கவும்
பலர் உண்டு..
இன்பத்தை மட்டுமே
பகிர முடிந்தது அங்கு !!
இதயத்தை பகிர்ந்துகொள்ள
நீ மட்டும் தான்
என் அன்புத் தோழி!
சுயம் மறந்து
நேசிப்பவர் நலம் நாடிய
பல தருணங்களில்
ஆழமான நட்பு நம்முள் அரங்கேறியது !!
எதையும் இழக்கச் சம்மதிக்கும்
ஆழமான அன்பினால்
வேறூன்றியது அது !!!
எத்தனை எத்தனை
உறவுகள் வந்தாலும்
உள்ளம் திறந்து உண்மை வடித்து
உணர்வுகள் கொட்டி தோள் சாய்ந்திட
உனையே நாடும் என் மனம் !!!!!
வருடங்கள் பல கடந்து
சந்திக்கும் போதும்சிறுதயக்கமும் இன்றி
உள்ளன்போடு உறவாடும்
அன்யோன்யம்உன்னிடம் மட்டுமே !
சுகத்தைப் பகிர மறந்தாலும்
சோகத்தைப் பங்குபோடத் துடிக்கும்
என் உயிர்த் தோழி!
நெஞ்சில் நன்றி சுரக்க
கண்ணில் நீர் வடிய
கை கூப்புகிறேன் மனதில்...
உன் நட்பும்
உன் நட்பின் பாதிப்பும்
வாழ்நாள் முழுதும்
என்னோடு நடை போடும் என்று
நிணைத்துக் கொண்டிருந்தேன்
ஆனால் பாதியிலேயே போய்விட்டாயே
என் தோழி??????
(என்னை விட்டும் இந்த உலகத்தை விட்டும் பிரிந்த என் தோழிக்காக)

Saturday, May 16, 2009

உனக்குள்...


புரிந்து கொள்...

உனக்குள் உறைந்து கிடக்கிறேன்...

வெறுத்து விலகியபடி ஏன்...

உறவா பகையா நீ....

நெருங்க மறுக்கிறாய்...

குளிர்ந்த நிலவும் நீயாய்...

சுடும் சூரியனும் நீயாய்...

நெஞ்சை மிதித்து நடக்கிறாய்...

நொறுங்கி போகிறேன்...

சில சமயங்களில்...

என் உயிரே

அம்மி மிதித்து
அருந்ததி பார்த்து
ஆண்டு இங்கு இருபது
ஆயாச்சு.

எப்போ நீ பிறப்பே
என்று தான்
இங்கு ஒரே பேச்சு...!!

இதயத்து அறைகளிலே
இளம்பிஞ்சே
உன்முகம் தான்...

என் கந்தகக்
கருப்பையில்
ஃபீனிக்ஸாய்
எழுவாயா???

விரதமும் வேண்டுதலும் - உன்
வரவைச் சொல்லலையே...!!
வாடகைத்தாய் வாங்க
எனக்குப் பிடிக்கலையே!!

சோதனைக்குழாய் முறைக்கும் - முதல்
சோதனையிங்கு பணத்திலாமே??
சொச்ச ரொக்கமில்லையினா
சோதனைக்குழாயும் கிடைக்காதாமே??!!

உன் பிஞ்சுவிரல் ஸ்பரிசத்துக்காய் என்
உயிரே தவிக்குதிங்கே...!!
நஞ்சுரைக்கும் வல்லூறால் - என்
நெஞ்சு மருகி விம்முதிங்கே...!!

ஆண்டுபல போனாலும் - உன் வரவு
கனவில் தான் நிஜமாச்சு...!!
'ம்மா'-னு நீ சொல்ல தவமிருக்கும்
இந்த தரிசுத்தாய் நானாச்சு..!!

பேதையாகி பிதற்றுறேனே - உன்
பிஞ்சுமுகம் காணாமலே...!!
காலம் வந்து கனிந்துவிட்டால் - நீ
என்கண் முன்னாலே...!!

காத்திருந்து கருகினாலும் - உன்
நினைப்பு மட்டும் நித்தியமாய்...!!
பூத்திருக்கும் புதுப்பூவாய் - நீபிறக்க
இன்னும் எத்தனைநாள் சத்தியமாய்..??

பிரம்மன் வரையா ஓவியமே..!!
சிற்பி செதுக்கா
சீர் சிலையே..!! - என்
வயிற்றில் வளரா
வளர் பிறையே...!!

என்று வந்து
என் வயிற்றில்
உயிர்த்து என்னை
உயிர்ப்பிப்பாய்..???

( இதை என் தோழிக்காக ,அவள் விழியில் இருந்து வரும் கண்ணீர்க்காக)

Friday, May 15, 2009

அலைகள் ஒய்வதில்லை

cid:image001.jpg@01C9C59D.122790D0


cid:image002..jpg@01C9C59D.122790D0



cid:image003.jpg@01C9C59D.122790D0



cid:image004.jpg@01C9C59D.122790D0


cid:image005.jpg@01C9C59D.122790D0

cid:image007.jpg@01C9C59D.122790D0



cid:image008.jpg@01C9C59D.122790D0



cid:image009.jpg@01C9C59D.122790D0



cid:image010.jpg@01C9C59D.122790D0

Monday, May 11, 2009

உறவுகளில் மலர்களாக இருப்போம்

நாம் நம்மை அறியாமலேஎந்த நாளும் எந்த நேரமும் உறவுகளை ஏற்ப்படுத்திக் கொண்டேதான் இருக்கிறோம். உற்வு என்பது உணர்வால் உருவானது, உள்ளங்களின் சங்கமங்களினால் விளைவது. உற்வுகள் இல்லாமல் வீடு இல்லை, நாடு இல்லை, உலகம் இல்லை. உறவு என்றால் இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்வது, ஒருவொருக்கொருவர் அன்பு செலுத்துவது், துயர் துடைப்பது,உற்சாகத்தை தூண்டுவது், தவறைக் கண்டிப்பது,உயர்வில் ஊக்கம் காட்டி மகிழ்வதாகும்.

கால்களால் அடியெடுத்து நடக்கும்போது மண்ணுடன் உறவு உண்டாகிறது. நீச்சலடிக்கும் போது நீருடன் உறவு ஏற்படுகிறது.இரவில் அண்ணாந்து பார்க்கும் போது கண்சிமிட்டும் விண்மீண்களுடன் உறவு ஏற்பட்டு விடுகிறது.

இயற்கையுடன் உறவாடுவது இத்தனை எளிதாக இருக்கும் போது, மனிதர்களுடன் ஏற்படுத்திக் கொள்ளும் உற்வுகள் மட்டும் கசந்து போவது ஏன்?

விதைகளாக இருக்கும் வரை தாவரங்களால் ஒன்றோடொன்று உறவாட முடிவதில்லை. அது மலர்களாக பூக்கும் பொழுதுதான் வண்டுகளை ஈர்த்து அதன் மூலம் பிற மலர்களுடன் தொடர்பு கொண்டு காய்ந்து கனிந்து பல்கி பெருக முடிகிறது.

விதைகள் மூடி இருக்கின்றன? மலர்கள் திறந்து இருக்கின்றன. உறவுகள் ஏற்படுவதற்கும் ஏற்படாமலேயே போய் விடுவதற்க்கும் காரணம் இதுதான்.

அதனால் நாம் நம்முடைய மனதை மலர்களைப் போல் திறந்து வைத்துக் கொள்வோம். விதைகளைப் போல இறுக்கமாக மூடவேண்டாம்.

உறவுகள் மேம்பட அன்பு ஒன்றுதான் வழி. ஆகவே உலகமானாலும், உடலானாலும், வாழ்க்கையானாலும் உற்வுகள்தான் வாழ்க்கையின் அடிப்படை.