Monday, May 11, 2009

உறவுகளில் மலர்களாக இருப்போம்

நாம் நம்மை அறியாமலேஎந்த நாளும் எந்த நேரமும் உறவுகளை ஏற்ப்படுத்திக் கொண்டேதான் இருக்கிறோம். உற்வு என்பது உணர்வால் உருவானது, உள்ளங்களின் சங்கமங்களினால் விளைவது. உற்வுகள் இல்லாமல் வீடு இல்லை, நாடு இல்லை, உலகம் இல்லை. உறவு என்றால் இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்வது, ஒருவொருக்கொருவர் அன்பு செலுத்துவது், துயர் துடைப்பது,உற்சாகத்தை தூண்டுவது், தவறைக் கண்டிப்பது,உயர்வில் ஊக்கம் காட்டி மகிழ்வதாகும்.

கால்களால் அடியெடுத்து நடக்கும்போது மண்ணுடன் உறவு உண்டாகிறது. நீச்சலடிக்கும் போது நீருடன் உறவு ஏற்படுகிறது.இரவில் அண்ணாந்து பார்க்கும் போது கண்சிமிட்டும் விண்மீண்களுடன் உறவு ஏற்பட்டு விடுகிறது.

இயற்கையுடன் உறவாடுவது இத்தனை எளிதாக இருக்கும் போது, மனிதர்களுடன் ஏற்படுத்திக் கொள்ளும் உற்வுகள் மட்டும் கசந்து போவது ஏன்?

விதைகளாக இருக்கும் வரை தாவரங்களால் ஒன்றோடொன்று உறவாட முடிவதில்லை. அது மலர்களாக பூக்கும் பொழுதுதான் வண்டுகளை ஈர்த்து அதன் மூலம் பிற மலர்களுடன் தொடர்பு கொண்டு காய்ந்து கனிந்து பல்கி பெருக முடிகிறது.

விதைகள் மூடி இருக்கின்றன? மலர்கள் திறந்து இருக்கின்றன. உறவுகள் ஏற்படுவதற்கும் ஏற்படாமலேயே போய் விடுவதற்க்கும் காரணம் இதுதான்.

அதனால் நாம் நம்முடைய மனதை மலர்களைப் போல் திறந்து வைத்துக் கொள்வோம். விதைகளைப் போல இறுக்கமாக மூடவேண்டாம்.

உறவுகள் மேம்பட அன்பு ஒன்றுதான் வழி. ஆகவே உலகமானாலும், உடலானாலும், வாழ்க்கையானாலும் உற்வுகள்தான் வாழ்க்கையின் அடிப்படை.

1 comments:

said...

அருமை மாலா ! ஆனா கொஞ்சம் டீடெய்லா விரிவா எழுதுப்பா!நல்லா இருக்கு!