Thursday, April 30, 2009

நரியின் சூழ்ச்சி

காகம் ஒன்று வந்தது.
காக்கா என்று கத்தித்து
பறந்து சென்று பட்சண
கடை தனிலே ஒர் வடை.

கொளவிக் கொண்டு வாய்தனில்
களிப்பாய் சென்றது மரத்தின் மேல்
களிப்ப்புடன் தின்னவே
கண்டதே ஒர் நரி

சிநேகிதா, சிநேகிதா
ஷேமம் தானே என்றது
உன் பாட்டைக் கேட்கவே
விரைந்து வந்தேன் என்றது

காகம் பெருமை கொள்ளவே
காக்கா என்று கத்தித்து .
வடையும் கீழே விழுந்தது
நரியும் எடுத்து சென்றது.

Wednesday, April 29, 2009

அன்பு

அன்புங்கிறது ஒரு தியானம் மாதிரி. அன்பு செலுத்துவதை விட ஒரு பெரிய தியானம் வேறெதுவாகவும் இருக்க முடியாது,அந்த தியானத்தை மட்டும் வாழ்க்கையில் பழகிட்டோம் என்றால் அதிலிருந்து விடுபட முடியாது. அதைத் தவிர வேறு எதுவுமே பெரிய விஷயமா தெரியவே தெரியாது. அதனால் அன்பு என்னும் சொத்தை நம்மிடையே தக்க வைத்து கொள்வோம்.

உயிர்

பூக்கள் என்பது
உதிரும் வரை
இரவு என்பது
விடியும் வரை
உறவு என்பது
பேசும் வரை
பிரிவு என்பது
இணையும் வரை
நட்பு என்பது
உயிருள்ள வரை

_____________________________

Monday, April 27, 2009

முரண்பாடு

குறுக்கே சென்ற பூனை
எதிரே வந்த கைம்பெண்
சகுனம் சரியில்லை என
வருத்தப்பட்டார் தன்
விதவை சகோதரியிடம்
வீட்டுப் பூனைக்கு
பாலூற்றியவாறு

இலையுதிர் முதிர்மரம்

காற்றில் உந்தன் வாசம் இன்னும்
கலந்து கமழ்கிறது --- மகனே
சோற்றுக்காக வெளிநாட்டு மண்உனைச்
சுமந்து திரிகிறது
வேற்று மண்ணில் வாழப் பழகி
வேர்கள் பரப்புகிறாய் --- பிடிச்
சோற்றில் அன்னியன் 'டாலர்' மினுக்கு
சுகங்கள் பழகிவிட்டாய்
கற்றுக் கொடுத்தேன்; கனவை வளர்த்தேன்
கற்பனை மெய்யாச்சு -- உன்னை
விற்றுவிட்டேனோ வெளிநாட்டிற்கு?
வெறுமை துனையாச்சு
வற்றிய இளமை, மிரட்டும் நோய்கள்,
வறுமை போதுமடா--- உன்னை
விற்றவள் கேட்கிறேன் மறுபடி வருகையில்
விடுதியில் சேர்த்திடடா--- உன்
கடனை தீர்த்திடடா
(என் பள்ளி்யில் பணியாற்றும் ஒரு ஆசிரியரின் ஆதங்கம். கணவரை இழந்து தவிக்கும் அவர் தன் ஒரே மகனும் வெளிநாட்டில் இருப்பதால் தன்னுடைய ஆற்றாமயை வெளிப்படுத்திய விதம்)

நான் வாழ வேண்டும்

இந்த உலகம்வாய்ப்புகளால் சூழப்பட்டது .இங்கே யாரும் கண்ணீர் விட்டு கரைந்து போக அவசியமில்லை. போராடத் துணிந்த எவருக்கும் பிரகாசமான எதிர்காலம் படைக்கப்பட்டு இருக்கிறது. தகுதியுள்ள எவருக்கும் உத்விக்கு நீள்வதற்கு கரங்கள் ஆயிரம் காத்திருக்கின்ற்ன. அத்தனைக்கும் தேவை,
'நான் வாழ வேண்டும்
சாதித்துக் காட்ட வேண்டும்'
என்ற உந்துதல் மட்டுமே

Sunday, April 26, 2009

நட்பு

மழலைப் பருவத்தில்
பார்த்து வியக்க
ஒரு நட்பு...

குழந்தைப் பருவத்தில்
ஓடி விளையாட
ஒரு நட்பு...

காளைப் பருவத்தில்
ஊர் சுற்ற
ஒரு நட்பு...

வாலிபப் பருவத்தில்
பேசி ரசிக்க
ஒரு நட்பு...

முதிர்ந்த பின்
அனுபவங்களைப்
பகிர்ந்து கொள்ள
ஒரு நட்பு...

நட்புகள் ஆயிரம் இருந்தும்
நட்பின் தேவை குறையவில்லை...

தேவையின் போது
தோள்களில் சாய
நட்பு வேண்டும்...

துன்பத்தின் போது
கண்ணீர் துடைக்க
நட்பு வேண்டும்...

மகிழ்ச்சியின் போது
மனம் மகிழ
நட்பு வேண்டும்...

நானாக நானிருக்க
நட்பே...
நீ எனக்கு
நட்பாக வேண்டும்....