Thursday, October 15, 2009

வாழ்த்து

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Wednesday, October 14, 2009

விதி

யாருக்கும் வெளிச் சூழ்நிலை எல்லாத் தருணங்களிலும் நூறு சத்விகிதம் விரும்பியபடி அமைந்து விடுவது இல்லை. மாற்ற முடியாதசூழ்நிலையை எதிர்த்து நின்றால் அமைதி கானாமல் போகும். மூளை ஸ்தம்பித்து நிற்கும். மாறாக அதை உள்ளபடி ஏற்றுக் கொண்டு விட்டால் அடுத்து என்ன செய்வது என்று புத்திசாலித்தனமாக யோசிக்க முடியும். இதற்க்காகத்தான் விதி என்று சொல்லி வைத்தார்கள்.
ஆனால் விதி என்றால் எதையும் சகித்துக் கொண்டு செயலற்று இருப்பது என்று தவறாக புரிந்து கொண்டு உள்ளார்கள். எந்த சூழ்நிலையிலும் சகித்துக் கொள்ளக் கூடாது. சகித்துக் கொள்வது என்பது விருப்பத்தோடு செய்வது இல்லை.கட்டாயத்தால் செய்வது.
எனவே அதை விடுத்து எதையும் அமைதியாக ஏற்றுக் கொண்டு விதியை நமக்காகவே மாற்றிக் கொள்வது எப்படி என்று யோசித்து செயலாற்ற வேண்டும். நாம் வளர வேண்டுமானால் விதி பற்றிய பயமுறுத்தல்கள்ல் இருந்து முதலில் வெளியே வர வேண்டும்.
கடவுளே வந்து சொன்னாலும் நம் விதியை நாம்தான் தீர்மானிப்போம் என்கிற உறுதி நமக்கு வரவில்லை என்றால் நம் வாழ்க்கை அதன் போக்கில்தான் நடக்கும். விரும்பியதை அடைய வேண்டும் என்ற தீவிரம் நமக்கு இருந்தால் நம் விதியை கடவுளிடமிருந்து பறித்து நாம் கையாள முடியும்.காயம்

இந்த உலகில்
அன்பானவர்கள்
பல காயங்களுக்கு
மருந்தாகிறார்கள்
ஆனால் நாம் அன்பு
செலுத்துபவர்கள்
நமக்கு தரும்
காயங்களுக்கு
மருந்தே இல்லை

Tuesday, October 13, 2009

அன்புள்ள கடிதம்

பெரும்பாலும் உரையாடல்களற்றே இருக்கும் அப்பா பெரியப்பாவின் அன்பை அவர்களுக்கிடையேயான பழைய கடிதங்களில் கண்டு கொண்டதாக
ஆனந்தப்பட்டு இருக்கிறாள் அம்மா....
ஆயிரம் மடல்கலோடு அழிந்த எழுத்துக்களோடு
பிரித்தாலே ஒடிந்து விழும் பொக்கிஷக் கடிதங்களை அப்படியே ஒப்பிக்கிறாள் எழுத படிக்க தெரியாத பாட்டி ...
நாம் நேசிக்கப்பட்டதை, வாழ்வை கொண்டாடிய நாட்களை, அடித்தல் திருத்தல்களுக்கிடையில் தெரியும் அன்பை நெகிழ வைக்கும்......
ஏதோ தேடுகையில் எங்கிருந்தோ தலைகாட்டும் பத்திரப்படுத்தப்ப்ட்ட பழங்கடிதங்கள்....
இப்போதைய மின்னஞ்சலிலும் தொலைபேசியிலும் பல்லூடகக் குறுஞ்செய்தியிலும் கொஞ்சங் கூட தெரியவில்லை எழுத்துப் பிழையோடு இயைந்த பசுமையான அன்பின் வாசம்.....
துடிதுடிப்புடன் துரிதமாகவே எல்லாம் பழகிப் பழகி நெகிழ்வான நினைவுகளும் அன்பான எழுத்துக்களும் ஏங்கி, யாசித்து , நிற்கப் போகிறோம் பின்வரும் நாளில்.......
இதுதான் சௌகர்யம் என்ற நம் கற்பிதத்தாலோ.....
தவிர்க்க இயலாமலோ.....
கூட்டு குடும்பங்களைப் போல்
பல பாரம்பரிய விழாக்களைப் போல்
சத்தமில்லாமல் காலாவதியாக வருகின்றன நம் கடிதங்களும்......

Monday, October 12, 2009

பசுமை நிறைந்த நினைவுகளே

(சமீபத்தில் மயிலாடுதுறை சென்றிருந்த பொழுது வானொலியில் கேட்ட
இந்தப் பாடல் மனதை பின்னோக்கி இழுத்துச் சென்றது. )

பசுமை நிறைந்த நினைவுகளே
படம்: ரத்தத் திலகம்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா

பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே
பழகிக் கழித்த தோழர்களேபறந்து செல்கின்றோம்
பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே
பழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம்

குரங்குகள் போலே மரங்களின் மேலே தாவித்திரிந்தோமே
குரங்குகள் போலே மரங்களின் மேலே தாவித்திரிந்தோமே
குயில்களைப் போலே இரவும் பகலும் கூவித் திரிந்தோமே
குயில்களைப் போலேஇரவும் பகலும் கூவித் திரிந்தோமே
வரவில்லாமல் செலவுகள் செய்து மகிழ்ந்திருந்தோமே
வரவில்லாமல் செலவுகள் செய்து மகிழ்ந்திருந்தோமே
வாழ்க்கைத் துன்பம் அறிந்திடாமல் வாழ்ந்து வந்தோமே
நாமே
வாழ்ந்து வந்தோமே

பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே
பழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம்

எந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோ
எந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோ
எந்த அழகை எந்த விழியில் கொண்டு செல்வோமோ
எந்த அழகை எந்த விழியில் கொண்டு செல்வோமோ
இந்த நாளை வந்த நாளில் மறந்து போவோமோ
இந்த நாளை வந்த நாளில் மறந்து போவோமோ
இல்லம் கண்டு பள்ளி கொண்டு மயங்கி நிற்போமோ
- என்றும்மயங்கி நிற்போமோ

பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே
பழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம்
நாம்பறந்து செல்கின்றோம்