Friday, April 15, 2011

சொந்த வாழ்க்கை?

என் அப்பாவின் அப்பா
தந்தைக்காக உழைத்து
ஓடாய்ப் போக....

என் அப்பா எனக்காகவே
தன் வாழ்நாளை
செலவிட

நான் என்
வாரிசுகளுக்காக
ஓடிக்கொண்டிருக்க....

என் மகன்
அவனுடைய அடுத்த
தலைமுறையின்
வளர்ச்சிக்காக
ஓட்டப்பந்தயம் ஆரம்பிக்க....

இங்கே யார்
தனக்காக வாழ
ஆரம்பிக்கிறார்?

குணம்

காற்றுக்குக் கோபம் வந்தால்
"சூறாவளி"
கடலுக்குக் கோபம் வந்தால்
"கொந்தளிப்பு"
பூமிக்குக் கோபம் வந்தால்
"பூகம்பம்"
பெண்ணே
உனக்கு மட்டும்
கோபம் வந்தால்
மவுனம் ஏன்?

Thursday, April 14, 2011

சித்திரையே மலர்ந்திடு...


* சித்திரையே மலர்ந்திடு
சித்திரமாய் மலர்ந்திடு...

* உச்சரிக்கும் போதே
உதடை இனிப்பாக்கும்
உள்ளத்தை இனிப்பாக்கும்...

* விண்புகழ் பெற்றத்
தேன் தமிழை
அகிலத்திற்கு
அடையாளம் காட்ட...
தங்கத் தமிழ் மாதங்களில்
முதல் மாதமாய்
முத்தாய்...
முத்தாய்ப்பாய்ப் பூக்கும்
சித்திரையே மலர்ந்திடு...

*வெற்றியெனும் சிகரத்தில்
முத்தமிட...
சோதனைகளை
அலட்சியமாய் உடைத்துச்
சாதனை படைக்க...
லட்சியத்தின் பாதையில்
யாத்திரை செல்லும்
வல்லவர்கள்
வாழ்வை வெல்ல...
நல்ல சூத்திரம் சொல்ல...
சித்திரையே மலர்ந்திடு...

*பாரெங்கும்
மனிதப் போர் ஓய...
பாரின் சாலையெங்கும்
மனிதநேயத் தேர் ஓட...
அகிம்சையெனும்
போதி மரத்தின் கீழ்
ஆண்டுக்கணக்காய்
அமைதி வேண்டி
அமர்ந்திருக்கும்...
எங்கள்
கவலை தவம் களைத்து
ஒற்றுமை வரமளிக்கச்
சித்திரையே மலர்ந்திடு...

*மனிதன் வாழ...
விலங்கு வாழ...
இயற்கை
செயற்கை வாழ...
கட்டணமற்ற
தன்னலமற்ற
தங்கும் விடுதி தந்த...
பூமியெனும் சத்திரமே
பூரிக்கும் அளவிற்கு
விசித்திரங்கள் புரிய
சித்திரையே மலர்ந்திடு...

*புத்தியற்றோர்
சித்தி பெற...
முத்தி பெற...

* யுகம்
யுத்தம் விடுத்து...
யுக்தி பெற
யுக்தி பெறும்
சக்தி தரச்
சித்திரையே மலர்ந்திடு...

* துன்ப இரவின்
நித்திரை சுட்டு
இன்ப ஒளி
முத்திரையிட...
சித்திரையே மலர்ந்திடு
சித்திரமாய் மலர்ந்திடு!

தலைகீழ் மாற்றங்கள்

இப்போதெல்லாம்....
இரவுகளைவிட
பகலில்தான் பயமாயிருக்கின்றது!

எதிரிகளை விட
நண்பர்கள்தான் நம்மை அழவைக்கிறார்கள்

கடலைவிட
குளங்களே ஆழமாக உள்ளது

கோவிலை விட
உண்டியலுக்கே பாதுகாப்பு தேவைப்படுகிறது

ஒரிஜினலை விட
ஒப்பனைகளே மேடையேற்றப்படுகின்றன

விரல்களை விட்டுவிட்டு
நகங்களுக்கே வர்ணம் பூசுகிறோம்.

வெற்றியை கொடுத்தவனைவிட
பெற்றவனே போற்றப்படுகிறான் ஜனநாயகத்தில்......


யாரையும் நோகாத கனவுகள்..

வலிக்காமல்
சலிக்காமல்
நினைவுகளிலிருந்து அற்றுப் போகாமல்
நிஜம் பூத்த மலர்களின் -
வாசம்தொடும்,
வரலாறாய் மட்டும் மிகாமலும்,
முன்னேற்றப் படிக்கட்டுகள் நிறைந்த
பல்லடுக்கு மாடிகளின் முற்றத்தில் -
மல்லிகைப் பூக்க,
ஒற்றை நிலாத் தெரிய,
மரம் செடி கொடிகளின் அசைவில் -
சுகந்தக் காற்று வீசும் -
தென்றல் பொழுதுகளுக்கிடையே
வஞ்சனையின்றி -
உயிர்கள் அனைத்தும் வாழ
யாரையும் நோகாமல் ஒரு - கனவேனும் வேண்டும்!!

Saturday, March 5, 2011

அன்னை இல்லம்

வீட்டின் பெயரோ
அன்னை இல்லம் !!!!!!!!!!
ஆனால்
அன்னை இருப்பதோ
முதியோர் இல்லம் !!!!!!

கூட்டலும்.... கழித்தலும்

திறமையை
கூட்டி கூட்டி
ஏழை
கோடிஸ்வரன் ஆனான்!

ஆணவத்தை
கூட்டி கூட்டி
கோடிஸ்வரன்
பிச்சைக்காரன் ஆனான்!

நேசம்

உண்மையாக நேசித்தால்
நெருப்புக் கூட
சுகம் ..
பொய்யா நேசித்தால்
எரிந்த சாம்பல் கூட
சுடும் ..

ஜோசியம்

கதவிடுக்கில் மாட்டி
உயிர் விட்ட பல்லி
சற்றுமுன்
ஜோசியம்
சொன்னது
யாருக்கோ !!!!!!!!

களங்கமற்ற அணுகுமுறை

நடைமுறை வாழ்வில் மனித மூளையானது தாவி தாவி போனாலும் எதையும் புரிந்துகொண்டு விடும் ஆற்றல் கொண்டது . ஆனால் மனித மனம் உணர்வுபூர்வமானது . தாவி தாவி போனால் யாரையும் புரிந்து கொள்ளாது தவிக்கும். வ்வொரு நிகழ்ச்சியையும் ஒவ்வொரு செயலையும் எழுத்து கூட்டி
படிக்க ஆரம்பித்தால் கற்பனை தறிகெட்டு ஒடி நிறைய உறவுகள் சிக்கல் நூல்கண்டுகலாகிவிடும். என்னுடையவர்கள் என்பதை முதல் எழுத்தாகவும் நல்லவர்கள் என்பதை கடைசி எழுத்தாகவும் மட்டும் புரிந்து கொண்டு விட்டால் நடுவே எப்படிப்பட்ட குழப்ப சம்பவங்கள் நடந்தாலும் அந்த அடிப்படை அன்பு மாறாமலிருக்கும்.கணவன் முதல் அலுவலக ப்யூன் வரை நாம் தினமும் சந்திக்கும் எல்லா முகங்களுக்கும் உறவுகளுக்கும் இந்த முதல் _ கடைசி எழுத்து பார்மலா பொருந்தும் .
வேண்டியதெல்லாம் களங்கமற்ற அணுகுமுறைதான் .........

Friday, February 11, 2011

நாம் மனிதர்கள்

கை அசைந்தாலே
காற்றில் பறந்துவிட
நாம்
பயந்தாங்கொள்ளி காகம் அல்ல

ஆபத்தை அறிந்தால்
மணலுக்குள்
கொள்ள
முட்டாள் நெருப்பு கோழியுமல்ல

தொட்டாலே
சுருண்டு கொள்ள
பரிதாப மரவட்டையும் அல்ல

வருவது எதுவாயினும்
எதிர் கொள்ள வேண்டும்
உறுதியோடு நின்று
மகுடம் சூட வேண்டும் .
ஏனெனில்
"நாம் மனிதர்கள்"

நட்பு

கரை மோதும் கடல் அலை போல
என் நட்பின் தாழ்வாரங்களில்
சீரான இடைவெளியில் ஈரம் விட்டு
செல்லும் உனக்காக இந்த மனசு
நீள் கரையாய் எப்பொழுதும் சிரித்திருக்கும் ......................