Saturday, May 16, 2009

உனக்குள்...


புரிந்து கொள்...

உனக்குள் உறைந்து கிடக்கிறேன்...

வெறுத்து விலகியபடி ஏன்...

உறவா பகையா நீ....

நெருங்க மறுக்கிறாய்...

குளிர்ந்த நிலவும் நீயாய்...

சுடும் சூரியனும் நீயாய்...

நெஞ்சை மிதித்து நடக்கிறாய்...

நொறுங்கி போகிறேன்...

சில சமயங்களில்...

என் உயிரே

அம்மி மிதித்து
அருந்ததி பார்த்து
ஆண்டு இங்கு இருபது
ஆயாச்சு.

எப்போ நீ பிறப்பே
என்று தான்
இங்கு ஒரே பேச்சு...!!

இதயத்து அறைகளிலே
இளம்பிஞ்சே
உன்முகம் தான்...

என் கந்தகக்
கருப்பையில்
ஃபீனிக்ஸாய்
எழுவாயா???

விரதமும் வேண்டுதலும் - உன்
வரவைச் சொல்லலையே...!!
வாடகைத்தாய் வாங்க
எனக்குப் பிடிக்கலையே!!

சோதனைக்குழாய் முறைக்கும் - முதல்
சோதனையிங்கு பணத்திலாமே??
சொச்ச ரொக்கமில்லையினா
சோதனைக்குழாயும் கிடைக்காதாமே??!!

உன் பிஞ்சுவிரல் ஸ்பரிசத்துக்காய் என்
உயிரே தவிக்குதிங்கே...!!
நஞ்சுரைக்கும் வல்லூறால் - என்
நெஞ்சு மருகி விம்முதிங்கே...!!

ஆண்டுபல போனாலும் - உன் வரவு
கனவில் தான் நிஜமாச்சு...!!
'ம்மா'-னு நீ சொல்ல தவமிருக்கும்
இந்த தரிசுத்தாய் நானாச்சு..!!

பேதையாகி பிதற்றுறேனே - உன்
பிஞ்சுமுகம் காணாமலே...!!
காலம் வந்து கனிந்துவிட்டால் - நீ
என்கண் முன்னாலே...!!

காத்திருந்து கருகினாலும் - உன்
நினைப்பு மட்டும் நித்தியமாய்...!!
பூத்திருக்கும் புதுப்பூவாய் - நீபிறக்க
இன்னும் எத்தனைநாள் சத்தியமாய்..??

பிரம்மன் வரையா ஓவியமே..!!
சிற்பி செதுக்கா
சீர் சிலையே..!! - என்
வயிற்றில் வளரா
வளர் பிறையே...!!

என்று வந்து
என் வயிற்றில்
உயிர்த்து என்னை
உயிர்ப்பிப்பாய்..???

( இதை என் தோழிக்காக ,அவள் விழியில் இருந்து வரும் கண்ணீர்க்காக)

Friday, May 15, 2009

அலைகள் ஒய்வதில்லை

cid:image001.jpg@01C9C59D.122790D0


cid:image002..jpg@01C9C59D.122790D0cid:image003.jpg@01C9C59D.122790D0cid:image004.jpg@01C9C59D.122790D0


cid:image005.jpg@01C9C59D.122790D0

cid:image007.jpg@01C9C59D.122790D0cid:image008.jpg@01C9C59D.122790D0cid:image009.jpg@01C9C59D.122790D0cid:image010.jpg@01C9C59D.122790D0

Monday, May 11, 2009

உறவுகளில் மலர்களாக இருப்போம்

நாம் நம்மை அறியாமலேஎந்த நாளும் எந்த நேரமும் உறவுகளை ஏற்ப்படுத்திக் கொண்டேதான் இருக்கிறோம். உற்வு என்பது உணர்வால் உருவானது, உள்ளங்களின் சங்கமங்களினால் விளைவது. உற்வுகள் இல்லாமல் வீடு இல்லை, நாடு இல்லை, உலகம் இல்லை. உறவு என்றால் இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்வது, ஒருவொருக்கொருவர் அன்பு செலுத்துவது், துயர் துடைப்பது,உற்சாகத்தை தூண்டுவது், தவறைக் கண்டிப்பது,உயர்வில் ஊக்கம் காட்டி மகிழ்வதாகும்.

கால்களால் அடியெடுத்து நடக்கும்போது மண்ணுடன் உறவு உண்டாகிறது. நீச்சலடிக்கும் போது நீருடன் உறவு ஏற்படுகிறது.இரவில் அண்ணாந்து பார்க்கும் போது கண்சிமிட்டும் விண்மீண்களுடன் உறவு ஏற்பட்டு விடுகிறது.

இயற்கையுடன் உறவாடுவது இத்தனை எளிதாக இருக்கும் போது, மனிதர்களுடன் ஏற்படுத்திக் கொள்ளும் உற்வுகள் மட்டும் கசந்து போவது ஏன்?

விதைகளாக இருக்கும் வரை தாவரங்களால் ஒன்றோடொன்று உறவாட முடிவதில்லை. அது மலர்களாக பூக்கும் பொழுதுதான் வண்டுகளை ஈர்த்து அதன் மூலம் பிற மலர்களுடன் தொடர்பு கொண்டு காய்ந்து கனிந்து பல்கி பெருக முடிகிறது.

விதைகள் மூடி இருக்கின்றன? மலர்கள் திறந்து இருக்கின்றன. உறவுகள் ஏற்படுவதற்கும் ஏற்படாமலேயே போய் விடுவதற்க்கும் காரணம் இதுதான்.

அதனால் நாம் நம்முடைய மனதை மலர்களைப் போல் திறந்து வைத்துக் கொள்வோம். விதைகளைப் போல இறுக்கமாக மூடவேண்டாம்.

உறவுகள் மேம்பட அன்பு ஒன்றுதான் வழி. ஆகவே உலகமானாலும், உடலானாலும், வாழ்க்கையானாலும் உற்வுகள்தான் வாழ்க்கையின் அடிப்படை.

விதி

செடி ஒன்றில்
பிடிகொண்டு
பூத்து சிரிக்கும்
பூக்கள் எல்லாம்
காம்பை பிரித்தால்
கடவுளுக்கும்
கரைந்த உயிர்க்கும்
கருங் கூந்தலுக்கும்
கடுங் காற்றுக்கும்
கடும் வெயிலுக்கும்
வாடிப் போகும் என்பது
அதனதன் விதி

என்னுள்ளே .... என்னுள்ளே

ஒரு கோடையில்
பரிசளித்தாய் நீ
காதலென்னும் பிராணியை

நீயே கூட மறந்திருக்கலாம்..
நான் கனவுகளும் கற்பனைகளும்
ஊட்டி வளர்க்கிறேன் அதை

ஒரு விநாடி கூட........
அங்கு இங்கு நகராத
உன்மத்தம் பிடித்தது அது
எந்நேரமும்
கழுத்தைக் கட்டிக்கொண்டு
இறங்க மறுக்கும்

செல்லக் கோபங்களையும்
அழகிய சிணுங்கல்களையும்
அதிகம் உடையது அது......

தொலை தூரத்தில்
தொலைத்து விட்டு வந்தாலும்
மீண்டும் வாசல் வந்து
மடிமேல் அமரும் அதை
கொஞ்சாமல் என்ன செய்வது?

நடு இரவுகளில்
நானாக உறக்கம் மறந்து
அதன் தலை கோதும் போதும்
பழி சுமத்திவிடுகிறேன்
அதுதான் கலைத்ததென

வளர்ப்பதே தெரியாமல்
மூடி மறைப்பதுதான்
எனக்கிருக்கும் சிக்கல்

இறங்கி வைக்க இயலாத
வாழ்நாள் கர்ப்பம் இது
சுமை மாற்றிக் கொள்ளமுடியாது
உன்னிடம் கூட...........


வெற்றியின் ரகசியம்

ஒரு பாறை
நூறு அடி அடித்த பிறகே
பிளந்தது என்றால்,
நூறாவது அடிதான்
வலிமையானது
என்பதல்ல அர்த்தம்.
முந்தைய
ஒவ்வொரு அடியுமே
அந்த இறுதி அடிக்கு
இணையானது.
இதுதான் இறுதி அடி என்ற
நம்பிக்கையோடு அடிக்கப்பட்டது.
ஒவ்வொரு முயற்சியும்
வெற்றியைத் தொடப்போகும்
இறுதி முயற்சியாக எண்ணிப் போராடுவதே
வெற்றியின் ரகசியம் .

அன்புள்ள அம்மா

அன்புள்ள அம்மா
உலகம் முழுவதும் சுற்றி தெரிந்து கொண்டடேன்
உன்னைச் சுற்றித்தான் என் உலகம் என்பதை
---------------------------------------------------------------
என்க்கு சுவாசம் தந்தவளைப் பற்றி
நான் வாசித்த முதல் கவிதை
அம்மா

அம்மா

அவளை நான் நேசிக்கவில்லை
சுவசிக்கிறேன்
வாழ்த்துச் சொல்ல அவள் என்
வாழ்க்கையில் வந்தவள் அல்ல
வாழ்க்கையே தந்தவள் அவள்
அம்மா.

Sunday, May 10, 2009

அம்மா என் சுவாசம்
என்னுடைய அம்மாவிற்க்கும்,உலகில் உள்ள அத்தனை தாய்மார்களுக்கும் எனது
அன்னையர் தின வாழ்த்துக்கள்.