Thursday, April 30, 2009

நரியின் சூழ்ச்சி

காகம் ஒன்று வந்தது.
காக்கா என்று கத்தித்து
பறந்து சென்று பட்சண
கடை தனிலே ஒர் வடை.

கொளவிக் கொண்டு வாய்தனில்
களிப்பாய் சென்றது மரத்தின் மேல்
களிப்ப்புடன் தின்னவே
கண்டதே ஒர் நரி

சிநேகிதா, சிநேகிதா
ஷேமம் தானே என்றது
உன் பாட்டைக் கேட்கவே
விரைந்து வந்தேன் என்றது

காகம் பெருமை கொள்ளவே
காக்கா என்று கத்தித்து .
வடையும் கீழே விழுந்தது
நரியும் எடுத்து சென்றது.

Wednesday, April 29, 2009

அன்பு

அன்புங்கிறது ஒரு தியானம் மாதிரி. அன்பு செலுத்துவதை விட ஒரு பெரிய தியானம் வேறெதுவாகவும் இருக்க முடியாது,அந்த தியானத்தை மட்டும் வாழ்க்கையில் பழகிட்டோம் என்றால் அதிலிருந்து விடுபட முடியாது. அதைத் தவிர வேறு எதுவுமே பெரிய விஷயமா தெரியவே தெரியாது. அதனால் அன்பு என்னும் சொத்தை நம்மிடையே தக்க வைத்து கொள்வோம்.

உயிர்

பூக்கள் என்பது
உதிரும் வரை
இரவு என்பது
விடியும் வரை
உறவு என்பது
பேசும் வரை
பிரிவு என்பது
இணையும் வரை
நட்பு என்பது
உயிருள்ள வரை

_____________________________

Monday, April 27, 2009

முரண்பாடு

குறுக்கே சென்ற பூனை
எதிரே வந்த கைம்பெண்
சகுனம் சரியில்லை என
வருத்தப்பட்டார் தன்
விதவை சகோதரியிடம்
வீட்டுப் பூனைக்கு
பாலூற்றியவாறு

இலையுதிர் முதிர்மரம்

காற்றில் உந்தன் வாசம் இன்னும்
கலந்து கமழ்கிறது --- மகனே
சோற்றுக்காக வெளிநாட்டு மண்உனைச்
சுமந்து திரிகிறது
வேற்று மண்ணில் வாழப் பழகி
வேர்கள் பரப்புகிறாய் --- பிடிச்
சோற்றில் அன்னியன் 'டாலர்' மினுக்கு
சுகங்கள் பழகிவிட்டாய்
கற்றுக் கொடுத்தேன்; கனவை வளர்த்தேன்
கற்பனை மெய்யாச்சு -- உன்னை
விற்றுவிட்டேனோ வெளிநாட்டிற்கு?
வெறுமை துனையாச்சு
வற்றிய இளமை, மிரட்டும் நோய்கள்,
வறுமை போதுமடா--- உன்னை
விற்றவள் கேட்கிறேன் மறுபடி வருகையில்
விடுதியில் சேர்த்திடடா--- உன்
கடனை தீர்த்திடடா
(என் பள்ளி்யில் பணியாற்றும் ஒரு ஆசிரியரின் ஆதங்கம். கணவரை இழந்து தவிக்கும் அவர் தன் ஒரே மகனும் வெளிநாட்டில் இருப்பதால் தன்னுடைய ஆற்றாமயை வெளிப்படுத்திய விதம்)

நான் வாழ வேண்டும்

இந்த உலகம்வாய்ப்புகளால் சூழப்பட்டது .இங்கே யாரும் கண்ணீர் விட்டு கரைந்து போக அவசியமில்லை. போராடத் துணிந்த எவருக்கும் பிரகாசமான எதிர்காலம் படைக்கப்பட்டு இருக்கிறது. தகுதியுள்ள எவருக்கும் உத்விக்கு நீள்வதற்கு கரங்கள் ஆயிரம் காத்திருக்கின்ற்ன. அத்தனைக்கும் தேவை,
'நான் வாழ வேண்டும்
சாதித்துக் காட்ட வேண்டும்'
என்ற உந்துதல் மட்டுமே

Sunday, April 26, 2009

நட்பு

மழலைப் பருவத்தில்
பார்த்து வியக்க
ஒரு நட்பு...

குழந்தைப் பருவத்தில்
ஓடி விளையாட
ஒரு நட்பு...

காளைப் பருவத்தில்
ஊர் சுற்ற
ஒரு நட்பு...

வாலிபப் பருவத்தில்
பேசி ரசிக்க
ஒரு நட்பு...

முதிர்ந்த பின்
அனுபவங்களைப்
பகிர்ந்து கொள்ள
ஒரு நட்பு...

நட்புகள் ஆயிரம் இருந்தும்
நட்பின் தேவை குறையவில்லை...

தேவையின் போது
தோள்களில் சாய
நட்பு வேண்டும்...

துன்பத்தின் போது
கண்ணீர் துடைக்க
நட்பு வேண்டும்...

மகிழ்ச்சியின் போது
மனம் மகிழ
நட்பு வேண்டும்...

நானாக நானிருக்க
நட்பே...
நீ எனக்கு
நட்பாக வேண்டும்....
ஒரே கூரையின்கீழ் பல்லாண்டுகளாக வாழ்ந்து, பல்வேறு விஷயங்களைப் பேசியவாறு இருப்பினும் - இருவரது இதயங்களும் சந்தித்துக் கொள்ளமால் இருக்கலாம்! முதல் சந்திப்பில், முதல் உரையாடலிலேயே நீண்ட கால நண்பர்கள் என்ற உணர்வையும் பெறலாம் - மேரி கேதர்வுட்

மூன்று எழுத்தில்:
எல்லோரிடமும் அன்பை காட்டி ஏமாந்து விடாதே
யாரிடமும் அன்பை காட்டி ஏமாற்றி விடாதே
தோல்வி எனக்கு பிடிக்கும் தோற்பது உன்னிடம் என்றால்
கோபம் எனக்கு பிடிக்கும் கோபிப்பது நீ என்றால்
அழுகை எனக்கு பிடிக்கும் ஆறுதல் சொல்ல நீ இருந்தால்
இது அதனையும் நடக்கும் நல்ல நட்பு இருந்தால்

உன் கையே உன்னை:
கனவுகள் நிஜமாவதில்லை !
நியாயங்கள் அழிவதில்லை !
நல்லவை கெடுவதில்லை !
அது போல
என் நட்பு என்றும் !
உன்னை விட்டு பிரிவதில்லை
உலகமே உயிர் உள்ள காற்றைத்தான் சுவாசிக்கிறார்கள் !
ஆனால்
நானோ உயிர் உள்ள உன் நட்பை சுவாசிக்கிறேன் ...!

தன்னம்பிக்கை



உதிர்ந்து விட்ட இலைகளை
நினைத்து தளராமல்
நிமிர்ந்து நிற்கும் மரம்

பூக்களைப் பறித்த பின்னும் கூட
சிரிக்கும் செடி
மேகந்தனை மழையாக சொரிந்த பின்பும்
தெளிந்து நிற்க்கும் வானம்
எப்படி ஆட்டினாலும்
விழாமல் நிற்கும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை
கூட்டை விட்டு வெளியேறினாலும்
பதட்டமின்றி பறக்கும்
குஞ்சுப் பறவைகள்
முழுசாக கரைந்து போன பின்பும்
மீண்டும்
உருவாகி ஒளிரும் பொளர்ணமி
எல்லாம் சொல்லித் தந்தன
எதிலும் உடையாமல்
தன்னம்பிக்கையைம் வாழும் வித்தையையும்

வேடம்


கடலைப் பார்த்தேன்
எப்படி போராடுவது என்று தெரிந்தது.
பூமியைப் பார்த்தேன்
எப்படி பொறுமையாயிருப்பது என்று தெரிந்தது.
அருவியைப் பார்த்தேன்
சுறு சுறுப்பின் அர்த்தம் தெரிந்தது.
மனிதனைப் பார்த்தேன்
எப்படி வேடம் போடுவது என்று தெரிந்தது
பெண்

நீ ஒரு மாணவி:

அன்பாய் இரு
அடிமையாய் இராதே
பாசமாய் இரு
பைத்தியமாய் இராதே
பொறுமையாய் இரு
மந்தமாய் இராதே
இரக்கம் காட்டு
ஏமாந்து போகாதே
அன்னம் போல் இரு
நல்லோரைத் தெரிந்து கொள்
பண்போடு பழகு
பாதகரை அறிந்து கொள்
கண்ணீர் தவறில்லை
ஆனால் அதில் மூழ்கி விடாதே
வேகம் அவசியம்தான்
ஆனால் விவேகத்தை மறக்காதே
வானம் தொட முயற்சி செய்
விழுந்தாலும் எழுந்து நில்
வேலிகளைத் தகர்த்தெறி
யாரும் காயப்படாமல் பார்த்துக் கொள்

(நான் படிக்கும் பொழுது என் ஆசிரியர் எனக்கு கற்றுக் கொடுத்த பாடம்)

என் பார்வையில் நட்புக்கு இலக்கணம்

என் பார்வையில் நட்புக்கு இலக்கணம்
நட்பு என்பது உச்சரிக்கும் சொல்லில் மட்டுமே உள்ளது அல்ல. அது இரு நபர்கள் பகிர்தலுடன், புரிதலும் கூடிய உண்மையான அன்பு. பயம் இல்லாத உறவாக நட்பை மட்டுமே கூறலாம். காரனம் நட்பின் அடிப்படையே சமத்துவம் தான். நட்பு என்பது ஒரு வலைப்பின்னல் போல. அதற்கு recharge, activation, roaming &singal எல்லாம் தேவையே இல்லை. நட்புக்கு மிக மிகத் தேவையான அம்சம் நம்முடைய மனதை மூடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.நட்பின் அடிபடையே அறிவை மட்டும்மல்ல, அறியாமையையும் பகிர்ந்து கொள்வதுதான். இருவருக்கும் ஒரு விஷயம் தெரியும் என்பதைப் போலவே இருவருக்கும் ஒரு வி்ஷயம் தெரியாது என்பது கூட நன்பர்களின் நெருக்கத்தை அதிகப்படுத்துகிறது. ஒருவருக்கு தெரிந்ததை மற்றவருக்கு சொல்வதும் தெரியாததை கேட்பதுமாக நட்பில் இருக்கும் பகிர்தல்தான் நட்பை மேலும் மேலும் வலுப்படுதிகிறது. பரசபர நம்பிக்கை இந்த நட்பின் அடிதளமாகிற்து் நட்ப்புக்கு மிகப் பெரிய பரிசு ஒன்று எனில் நம்முடைய வாழ்கையின் விலை மதிக்கமுடியாத காலத்தையே கொடுத்து விடு்கிரோம். அந்த காலம் திரும்பப் பெற இயலாது.