Monday, April 27, 2009

இலையுதிர் முதிர்மரம்

காற்றில் உந்தன் வாசம் இன்னும்
கலந்து கமழ்கிறது --- மகனே
சோற்றுக்காக வெளிநாட்டு மண்உனைச்
சுமந்து திரிகிறது
வேற்று மண்ணில் வாழப் பழகி
வேர்கள் பரப்புகிறாய் --- பிடிச்
சோற்றில் அன்னியன் 'டாலர்' மினுக்கு
சுகங்கள் பழகிவிட்டாய்
கற்றுக் கொடுத்தேன்; கனவை வளர்த்தேன்
கற்பனை மெய்யாச்சு -- உன்னை
விற்றுவிட்டேனோ வெளிநாட்டிற்கு?
வெறுமை துனையாச்சு
வற்றிய இளமை, மிரட்டும் நோய்கள்,
வறுமை போதுமடா--- உன்னை
விற்றவள் கேட்கிறேன் மறுபடி வருகையில்
விடுதியில் சேர்த்திடடா--- உன்
கடனை தீர்த்திடடா
(என் பள்ளி்யில் பணியாற்றும் ஒரு ஆசிரியரின் ஆதங்கம். கணவரை இழந்து தவிக்கும் அவர் தன் ஒரே மகனும் வெளிநாட்டில் இருப்பதால் தன்னுடைய ஆற்றாமயை வெளிப்படுத்திய விதம்)

0 comments: